களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில்
அதிபரோடு முரண்பட்டு தகாத வார்த்தை பேசிய பெற்றாருக்கு எதிராக ஆசிரியர்கள் இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.இது குறித்து களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் ரிஸ்வானிடம் வினவிய போது,
குறித்த மாணவன் இரண்டு முறை மாணவன் ஒன்றுக்கு பொறுத்தமற்ற hair style வைத்து வந்ததால் அதிபரினால் இரண்டு முறை கண்டனம் செய்யப்பட்டு மூன்றாவது முறை பெற்றாருடன் தன்னை சந்திக்குமாறு அதிபர் மாணவனுக்கு கூறினார்.பின்பு பெற்றார் அதிபருக்கு தகாத வார்த்தைகளால் பாடசாலைக்கு உள்ளேயும்,வெளியேயும் பிரச்சினைப்படும் வகையில் பேசியதாகவும் அவ்வேளையில் தானும் அருகில் இருந்ததாக பிரதி அதிபர் கூறினார்.
இதனால் பாடசாலையில் ஒழுக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும், வெளிநபர்களுடைய அநாசியவசியமான செல்வாக்கினை பாடசாலைக்குள் செலுத்தாது சிறப்பான பாடசாலையாக கட்டியெழுப்ப அதன் இயக்கத்தை உறுதிசெய்வதற்கு ஆசிரியர்களால் இன்று வெள்ளிக்கிழமை போராட்டமானெ்று மேற்கொள்ளப்பட்டது.
- அப்ரா அன்சார் -