அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சாகச நிகழ்ச்சியில் போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது இரண்டு விமானங்களில் ஆறு பேர் இருந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
போயிங் பி-17 மற்றும் பெல் பி-63 கிங்கோப்ரா விமானங்கள், விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் தரையில் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்து, வானில் கரும்புகை தோன்றியது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் ட்விட்டரில் “விடியோ பதிவுகள் இதயத்தை உடைக்கிறது. விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு படையினர் ஆதரவுடன் விபத்துக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Terrible mid-air collision over Dallas during a WW2 air show yesterday. Spectators capture a P-63 Kingcobra smashing into a B-17 Flying Fortress. pic.twitter.com/8rlH6T2jZR
— Shiv Aroor (@ShivAroor) November 13, 2022