உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கட்டுகளால் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக ஹர்த்திக் பாண்டியா 63 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்தான் 3 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பாக ஜோஸ் பட்லர் 80 ஓட்டங்களையும், ஹேல்ஸ் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த வெற்றியின் ஊடாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.