Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

Sport BREAKING: ஆர்ஜன்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் Rolls Royce கார் பரிசு - இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அதிரடி



உலகக் கிண்ண உதைபந்து போட்டியில் ஆசிய கண்டத்தின் சவுதி அரேபியா அணி யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.


இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில். அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.

இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய உதைபந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ரொய்ஸ் கார் பரிசாக வழங்கப்படுமென அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

இது போல விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994 ஆம் ஆண்டு பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது போலவே கார் பரிசு வழங்கப்பட்டது.

சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் இந்த வீரர்களை வெகுவாக பாராட்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »