புத்தாக்க போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் - 09 இல் கல்வி பயிலும் சகோதர மாணவர்களான MFM.Hakam & MFM. Hatheel என்ற மாணவர்கள்
கடந்த 14.11.2022 அன்று நடைபெற்ற மாகாண மட்ட புத்தாக்க போட்டியில் கலந்து கொண்டு "Engineering Technology" பிரிவில்
வீட்டில் கதவுகளை திறக்கச் செய்தல் மற்றும் மின் விளக்குகளை ஒளிரச் செய்தல் போன்ற செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கான Smart Home System ஒன்றினை தயாரித்து
மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
மேற்குறித்த சாதனையை மேற்கொண்ட மாணவர்களுக்கும்
ஊக்கமளித்த பெற்றார்
மற்றும் வழிகாட்டிய ஆசிரியர்கட்கும்
நன்றியையும் பாராட்டுக்களையும் பாடசாலை சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதிபர்.
18.11 2022
தகவல் :Mohamed Azeem