ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக ஜெஹான் ஹமீட் (Jehan Hameed) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவும், புதிய வேலைத்திட்டங்களைத் தொடங்கி புதிய பயணத்தைத் தொடங்கும் நோக்கிலும் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.