போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ
ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளார்.கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 500 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபலோவர்களைப் பெற்ற முதல் நபர் ரொனால்டோ ஆவார்.
கால்பந்தாட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோ, இன்ஸ்டாகிராமிலும் புதிய சாதனை படைத்தள்ளார்.
இன்ஸ்டாகிராம் அதிக எண்ணிக்கையான ஃபலோவர்களைக் கொண்டுள்ளவர்களில் இரண்டாமிடத்திலுள்ளவர், மற்றொரு புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமான ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸி ஆவார். அவரை 376 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இப்பட்டியலில் 3 ஆம் இடத்தில் அமெரிக்க மொடலான கைலி ஜென்னர் உள்ளார். அவரை 372 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆவது உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ளார்.
ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி எதிர்வரும் வியாழக்கிழமை (24) தனது முதல் போட்டியில் கானாவுடன் மோதவுள்ளது.