டிசம்பர் மாதம் முதல் QR முறை நீக்கப்படும் என்று வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விதத்தில் இதுவரை அப்படியான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எரிபொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட QR முறையானது முழுமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.