மனிதவள சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிய வளத்தாப்பிட்டி நாவலர் பாடசாலையில் கல்வி பயிலும் 2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைதிறனை விருத்தி செய்வதற்கான இலவச முன்னோடி பரீட்சையும் பரிசளிப்பு நிகழ்வும் 26 ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
புதிய வளத்தாப்பிட்டி கிறேஸ் பாலர் பாடசாலை மண்டபத்தில் அமைப்பின் பணிப்பாளர் ஆர். யோகநாதன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் திரு K ரவி, கிராம உத்தியோகத்தர், நிருவாகப் பணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் , நிதிப் பணிப்பாளர் திரு. ஆர், ராஜேந்திரன் மற்றும் பணிபாளர் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.