நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும்
வகையில், உணவுப் பொருட்களை தேவையானவர்கள் எடுத்துச் செல்லுங்கள், இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள் எனும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் 'Resilience' அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.திருகோணமலையின் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சாந்த/ அந்தோனியர் மகா வித்தியாலயத்தில் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.
பாடசாலையில் வைக்கப்பட்ட பெட்டியில் பிஸ்கட், பருப்பு, சினீ ,கோதுமை மா, சமபோஷ மேலும் சில பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டன.
தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் தேவைப்படுவோர், இப்பெட்டிகளிலிருந்து பெற்றுச் செல்லும் அதேவேளை, வசதி படைத்தவர்கள் தங்களாலான உணவுப் பொருட்களை இப்பெட்டிகளில் இட்டுச் செல்ல முடியுமென, இத்திட்டத்தின் செயற்படுத்திய கே.எப்.பர்ஸானா தெரிவித்தார்.