Our Feeds


Sunday, November 13, 2022

ShortNews Admin

PHOTOS: பாசிக்குடாவில் இடம் பெற்ற கல்குடா டைவர்ஸின் ஏழாம் கட்ட இலவச நீச்சல் பயிற்சி.



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்


ஏழாம் கட்ட இளைஞர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம் இன்று 13.11.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா கடற்கரை மற்றும் மெரீனா பீச் ஹோட்டலில் கல்குடா டைவர்ஸ் அணியின் ஏற்பாட்டில் “ஶ்ரீலங்கா லைப் காட்” வழிகாட்டலுடன் இடம்பெற்றது. 


இதன் போது, ஏறாவூர், கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சியை கற்றுக்கொள்வதற்காக ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.


இன்று காலை 8.00 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கான ஒத்துழைப்பினை ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் செய்திருந்தார்.


“கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடி ஹலீம் கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினார்.


பங்கு பற்றிய அனைவருக்கும் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும், சுழியோடி பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சிகள் ஒவ்வொருவரின் நிலைகளைப் பொறுத்து பயிற்சிகள் பயிற்றுவிப்பாளர்களினால் வழங்கப்பட்டது. அத்தோடு, நீச்சல் முற்றிலுமாக தெரியாதவர்களுக்கும் ஆரம்ப பயிற்சிகளும் வழங்கப்பட்டது.


அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளையும் கல்குடா டைவர்ஸ் அணியினர் தொடர்சியாக களத்தில் நின்று அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், எதிர்வருங்காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் அதிகமான இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் இவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.


ஆகவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் கல்குடா டைவர்ஸ் அணியைத்தொடர்பு கொண்டு இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »