ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்று (15) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி கடிதம் ஒன்றையும் இக்குழுவினர் கையளித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இப்பிரதிநிதிகள் குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறு சமூகமளித்தனர்.