Our Feeds


Wednesday, November 16, 2022

Anonymous

PHOTOS: பல துறைகளிலும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 900 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு IDM Nations Campus International ஆரவாரமாக நடத்திய பட்டமளிப்பு நிகழ்வு

 

 


IDM Nations Campus International தனியார் பல்கலைக்கழகம் நடத்திய பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 


குறித்த பட்டமளிப்பு நிகழ்வில் Doctor of Business Administration (DBA), International Master of Business Administration (IMBA), Master of Laws (LL.M.), Professional Graduate Diploma – Level 7, Bachelor of Laws (LLB), Bachelor of Business Management (BA), Bachelor of Early Childhood Education, Bachelor of Psychology and EdHat International Higher Diploma – Level 5 ஆகிய துறைகளில் சுமார் 900+ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.


முஜீபுர் ரஹ்மான், புத்திக பத்திரன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை சார்ந்த தமது பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டதுடன், பிரபல சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தனது சட்டத்துறை சார்ந்த Master க்கான மேற்படிப்பை பூர்த்தி செய்த சான்றிதழை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.


பிரபல சமூக செயல்பாட்டாளரும், கல்வியலாளருமான ஜனகன் விநாயகமூர்த்தியின் தலைமையில் மிகச் சிறப்பாக வெற்றி நடை போடும் IDM Nations Campus International பல்கலைக் கழகத்தின் குறித்த பட்டமளிப்பு நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நாலக கொடஹேவா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.


















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »