போதைப்பொருட்களுடன் 27 வயது பெண்ணொருவர் சம்மாந்துறை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 25) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து சம்மாந்துறையில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்ற வீட்டை முற்றுகையிட்டதில், திருமணமான 27 வயது பெண் ஒருவரை போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது அந்த பெண்ணிடமிருந்து 11 கிராம் 50 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருளையும், 435 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.