Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

O/L பரீட்டை முடிவுகளின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடத்திலும் A - 6500 பேர் அனைத்துப் பாடத்திலும் W




க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், 10,863 பேர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.


2020ஆம் ஆண்டு 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,661 ஆகும்.


2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 2 லட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை (25) இந்தப் பரீட்சை முடிவுகள் வெளியாகின.


இதன்படி அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறிய (9W) மாணவர்களின் எண்ணிக்கை 6,566 ஆக உள்ளது.


மேலும், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


நன்றி : புதிது தளம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »