திருகோணமலை, குச்சவெளிப் பிரதேச சபைத் தலைவர் ஏ. முபாறக் அவர்களின் வேண்டுகோளுக்கமைய திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிப் பிரச்சினை மற்றும் புல்மோட்டையிலுள்ள காணிப் பிரச்சினை சம்மந்தமாக இன்று (30) காணி அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ அவர்களை அவருடைய கொழும்பில் உள்ள அமைச்சில் சந்தித்து பேசியதன் மூலம் இப்பிரச்சினை சம்மந்தமாக அறிக்கை ஒன்றை வழங்குமாறு காணி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.