Our Feeds


Wednesday, November 30, 2022

ShortNews Admin

திருமலை மாவட்டத்தில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரணம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற தொலைத்தொடர்பு கோபுரங்களா? - இம்ரான் MP சந்தேகம்!



திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகள் விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொது வைத்தியசாலையும் 'A' தரத்திலான நான்கு தள வைத்தியசாலையும் ஏனைய வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன.  கிண்ணியா, மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் தரமுயர்த்தப்பட்டாலும் தேவையான வசதிகள் தற்போது குறைவாகவே உள்ளன. பொறுப்பான அமைச்சர் அதற்கான வசதிகளை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற சுகாதார அமைச்சு சம்பந்தமான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இம்ரான் மகரூப் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,  

கிண்ணியா வைத்தியசாலை தற்போது இட பற்றாக்குறையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. அங்கு எக்ஸ்ரே இயந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் எக்ஸ்ரே  பிரிவினை ஆரம்பிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு வருகின்ற நோயாளிகள் பல கிலோமீட்டர் சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் அவசரமாக எக்ஸ்ரே பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவகம் அதிகூடிய சனத்தையும் பிரதேசத்தையும் கொண்டுகாணப்படுகின்றமையால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை தோப்பூர் பிரதேசத்தை மையமாக கொண்டு புதிய அலுவலகம் அமைக்கவேண்டும் என்பதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தற்காலிக கட்டத்தில் காணப்படுவதால் அதற்கான நிரந்தர கட்டிடத்தையும் அதற்கான வாகன வசதிகளையும் ஏற்படுத்தித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும்,  திருமலை மாவட்டத்தில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறார்கள். தற்போது சிறுவயதினர் உட்பட புற்று நோயாளர்கள் மரணம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற தொலைத்தொடர்பு கோபுரங்களா?  என்று மக்கள் சந்தேகின்றனர். 

திருமலை மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய விஷேட குழுவென்றினை அமைக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »