Our Feeds


Wednesday, November 16, 2022

ShortNews Admin

லாபத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கா டெலிகொம் & இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த முயற்சிப்பது ஏன்? - ஆளும் கட்சி MP அரசாங்கத்திடம் கேள்வி



(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)


2023 ஆம் ஆண்டுக்காக வரவு-செலவுத் திட்டத்திற்கு பின்னணியில் பரந்துப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை தவிர்த்து இலாபமடையும்  ஸ்ரீ லங்கன் டெலிகொம் நிறுவனம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியற்றை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதன் காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என கோப் குழுவின் முன்னாள் தலைவர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டுக்காக வரவு-செலவுத் திட்டத்திற்கு பின்னணியில் பரந்துப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது முன்வைத்த கொள்கைளுக்கு இந்த வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு எதிராக நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கினார்கள், ஆகவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மக்களாணைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆதரவு வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்திற்கும்.

தற்போது சமர்ப்பித்துள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகளுக்கும் காணப்படுகின்றன. காலத்திற்கு காலம் கொள்கைகளையும்,திட்டங்களையும் மாற்றியமைத்துக் கொள்வதால் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது.

வரி கொள்கையை மாத்திரம் கொண்ட இந்த வரவு-செலவுத் திட்டம் தேசியத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையில் உள்ள.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை விடுத்து இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திடம் 51 பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் நட்டமடையவில்லை. மறுபுறம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் நட்டமடையவில்லை.

அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம்,இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை தனியார் மயப்படுத்த சாதகமாக உள்ள காரணிகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.வரவு செலவுத் திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »