நிலுவை கட்டணம் செலுத்தப்படாமையினால், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் மின்சார நிலுவை கட்டணம், 85 லட்சம் ரூபா என மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1998ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலம் வரை இந்த நிலுவை தொகை, மின்சார கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 2014ம் ஆண்டு முதல் அமைச்சர் நிலுவை தொகையை படிப்படியாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், முழுமையான நிலுவையை செலுத்துமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், அமைச்சர் அந்த நிலுவை தொகையை செலுத்த தவறியுள்ளமையினால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை கூறுகின்றது.