கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவும் பேஸ்புக்கின் தாய் நிறுவுனமான மேட்டாவின் சந்தைப் பெறுமதி 240.07 பில்லியன் டொலர்களாகவும் இருந்தது.
அதாவது இம்மூன்று நிறுவனங்களினதும் மொத்த சந்தைப் பெறுமதி 2.306 பில்லியன் டொலர்களாகும்.
நான்காவது காலண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி 8 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.