உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு
நடைபெற்ற குரூப் ஹெச் பிரிவு போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணி, உருகுவேயை எதிர்கொண்டது.முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் 2வது பாதியின் 54 வது நிமிடத்தில் போர்த்துகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி உருகுவே வலைக்குள் பந்தை தள்ளினார். ஆனால் மற்றொரு வீரர் புருனோ பெர்னாண்டஸ் மேல் பந்து பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் பெர்னாண்டசிற்கு வழங்குவதாக அறிவித்தார்.
போட்டி நேரம் முடிந்து நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 93வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்த்துகல், தனது .பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.