பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில்
முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் ஐகே குவென்டோகன் முதலாவது கோலை புகுத்தினார்.
இடைவேளையின் போது ஜேர்மனி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும், 76 ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் ரிட்ஸு டோவன் கோல் அடித்து, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.
அதன்பின் 83 ஆவது நிமிடத்தில் டகுமா அசானோ, ஜப்பானின் இரண்டாவது கோலை புகுத்தி ஜேர்மனிக்கு அதிர்ச்சியளித்தார்.