2022 உலகக் கிண்ண் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ஈரானை இங்கிலாந்து 6:2 கோல்கள் விகிதத்தில் வென்றது.
கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா சர்வதேச அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
குழு பி அணிகளுக்கிடையிலான இப்போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் முதலாவது கோலை புகுத்தினார்.
43 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயா சாகா அவ்வணியின் 2 ஆவது கோலை அடித்தார்.
45 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் 3 ஆவது கோலை ரஹீம் ஸ்டேர்லிங் புகுத்தினார்.
இடைவேளையின் போது இங்கிலாந்து 3:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
அதன்பின் 62 ஆவது நிமிடத்தில் புகாகோ சாகா தனது இரண்டாவது கோலை புகுத்தினார். இது இங்கிலாந்தின் 4 ஆவது கோல் ஆகும்.
65 நிமிடத்தில் ஈரான் அணி தனது முதலாவது கோலை புகுத்தியது. மெஹ்தி தொரேமி அந்த கோலை அடித்தார்.
எனினும், 71 ஆவது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்ட் இங்கிலாந்தின் 5 ஆவது கோலை புகுத்தினார்.
90 ஆவது நிமிடத்தில் ஜக் கிறேலிஸ் இங்கிலாநதின் 6 ஆவது கோலை புகுத்தினார்.
மேலதிக நேர ஆட்டத்தில் பொனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானிய வீரர் மெஹ்தி தொரேமி தனதும் தனது அணியினதும் இரண்டாது கோலை புகுத்தினார்.