FIFA உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடர் கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல அதிர்ச்சியளிக்கும் போட்டி முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பலம் வாய்ந்த பல அணிகள் சற்றும் எதிர்பார்க்காத அணிகளிடம் தோல்வியடைந்து வருகின்றன.
ஆர்ஜென்டினா அணி சவூதியிடம் வீழ்த்தமை, ஜெர்னியை ஜப்பான் வெற்றிகொண்டமை, அமெரிக்காவுடனான போட்டியை இங்கிலாந்து சமப்படுத்தியமை என ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத பெறுபேறுகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு போட்டி இடம்பெற்றுள்ளது.
ஆர்ஜென்டினா அணியை வெற்றிகொண்டதன் மூலம் தற்போது உலகக்கிண்ண காற்பந்து தொடரில் போலந்துடனான இன்றைய போட்டியை சவூதி அரேபியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.
எவ்வாறாயினும், குழு “C” இல் இன்று இடம்பெற்ற போட்டியில் போலந்து அணி 2-0 என்ற கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தியுள்ளது.
அந்த அணி 39 மற்றும் 82ஆவது நிமிடங்களில் அற்புதமான இரு கோல்களைப் பெற்று இந்த போட்டியை வெற்றிகொண்டுள்ளது.
இதன் ஊடாக குழு “C” இல் நொக்கவுட் சுற்றுக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை என்ற கேள்வி இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
\