அந்த வகையில் கட்டாரை எதிர்த்தாடிய நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 16 அணிகளின் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதேநேரம் ஈக்வடோரை 2-1 என்ற கணக்கில் வென்ற செனேகலும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே ஃப்ரான்ஸ், ப்ரேசில் மற்றும் போரச்சுகல் அணிகளும் அடுத்த நொக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த தொடரில் இருந்து வெளியேறிய கட்டார், உலக்கக்கிண்ணப் போட்டித் தொடரை நடத்தி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் வெளியேறிய முதல் அணியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.