கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனகல் அணியை 2:0 கோல் விகிதத்தில் நெதர்லாந்து வென்றது.
கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் குழு ஏ இலுள்ள அணிகளான நெதர்லாந்தும் செனகலும் மோதின.
போட்டியின் இடைவேளை வரை எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.
84 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் பிராங்கி டி ஜோங் அடித்த பந்தை அவ்வணி வீரர் கொடி கெப்கோ பாய்ந்து தலையால் தட்டி கோல் ஆக்கினார்.
உபாதை ஈடு நேர ஆட்டத்தில 99 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசென் அவ்வணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
குழு ஏ இல் தற்போது ஈக்குவடோரும் நெதர்லாந்தும் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.