கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் அணியை மொரோக்கோ அணி 2:0 கோல்களால் வென்றது.
இந்த உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் இது மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறாகும்.
பீபா உலகத் தரவரிசையில் பெல்ஜியம் 2 ஆம் இடத்திலும் மொரோக்கோ 22 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழு எவ் இலுள்ள பெல்ஜியம், மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல் துமாமா அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியின் 73 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் அப்தெல்ஹமீத் சபிரி முதலாவது கோலை புகுத்தினார்.
போட்டியின் உபாதை ஈடு நேரத்தில் 92 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ஸகாரியா அபோக்லால் அவ்வணியின் 2 ஆவது கோலையும் புகுத்தினார்.