பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பினால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வரும், கால்பந்து உலகக்கிண்ண கால்பந்து தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலகக்கிண்ண கால்பந்து தொடர் நாளைமறுதினம் 20ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் 5 முறை சம்பியன் கிண்ணத்தை வென்ற பிரேசில் மற்றும் நடப்பு சம்பியனான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டீனா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்ளிட்ட 32 அணிகள். 8 பிரிவாக பிரிக்கப்பட்டு களமிறங்கவுள்ள நிலையில் இவை லீக் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.
இந்நிலையில். லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நொக்-அவுட் முறையில் 2-வது சுற்றுக்குள் நுழையும். இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகின்றன. அந்த வகையில் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள முதல் போட்டியில் கட்டார் அணி, ஈகுவடோர் அணியை இரவு 9.30 மணிக்கு எதிர்கொள்கிறது.