Our Feeds


Friday, November 25, 2022

News Editor

இலங்கையில் துரித உணவுகளின் (Fast food) விலை உயர்வால் உடல் பருமன், சர்க்கரை நோய்களின் பாதிப்பு குறைந்தது!


 

சந்தையில் துரித உணவு (Fast food) வகைகளின் விலை உயர்வால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

மருத்துவ  ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ இதனைத்  தெரிவித்துள்ளார்.

பெரியவர்களும் குழந்தைகளும் சந்தையில் விலையுயர்ந்த துரித உணவுகளை வாங்குவதைத் தவிர்ப்பதே இதற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு 105 கிராமப்புற சேவை அலுவலர் பிரிவுகளுடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது. குறிப்பாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற நோய்கள் வெகுவாக குறைந்துள்ளதையும் இந்தக் கணிப்பு உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »