பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், சி.ஐ.டியினர் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிவான் அனுமதியளித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி இன்று வெள்ளிக்கிழமை (25) மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை டிசம்பர் 8 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.