தமிழ் ஊடக வலையமைப்பில் சமூக வலைதளத்தில் நடத்தப்படும் செய்தித் தளங்களில் அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களை தைரியமாக மக்கள் மன்றில் முன்வைத்து வரும் சகோதரி ரினோசா நவ்ஷாதின் YouTube செனல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை (Subscribers) பெற்று சாதித்துள்ளது.
வளர்ந்து விட்ட சமூக வலைதள போட்டிக்கு மத்தியில் செய்திகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்குவதில் தனியிடம் பெற்றுள்ள ரினோஸா நவ்ஷாத் பல தடைகளை தாண்டி தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்கு பேர் தம்மிடம் பணியாற்றுவதாகவும் கூறி தனது பூரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்ணாக இருந்து தனது சாதனைப் பயணத்தை தைரியமாக முன்னெடுத்து வரும் சகோதரி ரினோஸாவுக்கு ShortNews சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.