இவர்கள் நேற்றிரவு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் செய்திக்கு தெரிவித்தார்.
35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்களே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்.
தற்கொலைக்கு முயற்சித்த மற்றுமொருவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும், அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கைக்க மீள அனுப்ப அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தாம் நாட்டிற்கு மீள செல்ல தயார் இல்லை என தெரிவித்தே தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து உரிய விஸா நடைமுறைகளின் பிரகாரம் மியன்மார் சென்ற 306 இலங்கையர்கள், அங்கிருந்து கப்பல் ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்தனர்.
இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் எல்லையில் வைத்து குறித்த இலங்கை அகதிகள் கடந்த 7ம் திகதி ஜப்பான் கப்பல் ஒன்றில் மீட்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மூன்று குழுக்களாக பிரித்து, மூன்று முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை, கட்டாயம் நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே, தாம் இலங்கையை நோக்கி திரும்ப போவதில்லை என தெரிவித்து, தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். (