பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பாடசாலைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டு துளைக்காத ஆடை அணிந்து முகத்தை மூடியவாறு அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவது கண்காணிப்பு கெமராவில் பதிவாகி உள்ளது. இந்நிலையில், ஒரு அரசுப் பாடசாலை மற்றும் ஒரு தனியார் பாடசாலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில்,துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசில் சமூக ஊடகங்களில் சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ வெளியான நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.