யூடியூப் காணொளிகளைப் பார்த்து, இராணுவத்தினர் பயன்படுத்தும் ஸ்னைப்பர் துப்பாக்கியைபோன்று சுமார் நான்கு அடி நீளம் கொண்ட ஒரு துப்பாக்கியை தயாரித்த ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கழிவு பிளாஸ்டிக் பாகங்கள், வெள்ளிப்பாகங்கள், ஸ்பிரின், இரும்பு மற்றும் அலுமினிய குழாய்களே இந்த துப்பாக்கி மற்றும் பைனாகுலர் ஆகியனவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனைகள், நாய்கள் மற்றும் பறவைகளை இந்த துப்பாக்கியினால் சுட்டதாகவும், சுடப்பட்ட பறவைகள், விலங்குகள் அதே இடங்களில் வீழ்ந்து இறந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.