இரத்தினக்கற்கள் என சந்தேகிக்கப்படும் கற்கள் பொதியுடன்
நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.கல்லேல்ல-தமன்கடுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் களவாஞ்சிகுடி முகாமிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் காரைதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினங்கள் என சந்தேகிக்கப்படும் 188 கற்கள் மற்றும் இரத்தினக்கற்களை சோதனையிட பயன்படுத்திய கருவி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.