Our Feeds


Friday, November 11, 2022

ShortNews Admin

டுவிட்டர் வங்குரோத்தாகலாம் - புதிய உரிமையாளரான இலோன் மஸ்க் எச்சரிக்கை.



டுவிட்டர் நிறுவனம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படக்கூடிய அபாயத்தை அந்நிறுவனத்தின் பதிய உரிமையாளர் இலோன் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.


கடந்த மாத இறுதியில் 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கினார். 

டுவிட்டரை வாங்கி செலவை ஈடு செய்வதற்கும்,  அந்நிறுவனத்தை லாபமடைய வைப்பதற்கும் இலோன் மஸ்க் போராடி வருகிறார். 

தனது மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் தனக்குரிய பங்குகளின் ஒரு பகுதியையும் அவர் விற்பனை செய்தார். 

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 3000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதற்கு பிரபலங்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று வியாழக்கிழiமை டுவிட்டர் ஊழியர்கள் அனைவருடனும் முதல் தடவையாக இலோன் மஸ்க் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இதன்போது, அடுத்த வருடம் டுவிட்டர் நிறுவனம் பல பில்லியன் டொலர்களை இழக்கக்கூடும் என இலோன் மஸ்க் எச்சரித்தார் என செய்தி வெளியாகியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை தான் வாங்கிய பின்னர் விளம்பரதாரர்கள் வெளியேறுவதால் தினமும் பல மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுவதாக மஸ்க் தெரிவித்துள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை டுவிட்டரின் உயர் அதிகாரிகள் பலர் ராஜினாமா செய்வதாக கடந்த சில தினங்களில் அறிவித்துள்ளனர்.

ஆனால், வங்குரோத்துக்கான சாத்தியம் தொடர்பாகவோ, ராஜினாமா தொடர்பாகவே டுவிட்டர் நிறுவனம் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »