Our Feeds


Monday, November 7, 2022

ShortNews Admin

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தனுஷ்கவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்



தனுஷ்க குணதிலக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் கொடுமை தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், பிணை கோரி சிட்னி நீதிமன்றத்தில் இன்று (7) கைவிலங்குடன் வீடியோ மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.


தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசிய குணதிலக, நீதிமன்றில் ஒரு திரையில் காட்டப்பட்டார்.


இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (07) அவுஸ்ரேலியாவின் சிட்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


குணதிலக ஞாயிற்றுக்கிழமை இரவு சுர்ரி ஹில்ஸ் (Surry Hills) பொலிஸ் நிலையத்தின் கைதிகள் அறையில் தங்க வைக்கப்பட்டார்.


அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தனுஸ்க மிகவும் கவலைப்படுவதாக, அவருடைய சட்டத்தரணி ஆனந்த அமரநாத் கூறியுள்ளார்.


“அந்த விடயம் நீதிமன்றத்திற்கு (ஞாயிற்றுக்கிழமை) வரும் என்று அவர் நம்பினார், அதனால் அது நடக்காததால் அவர் ஏமாற்றமடைந்தார்” எனவும் அமராநாத் குறிப்பிட்டுள்ளார்.


“அவர் மீண்டும் இலங்கைக்கு வர முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி அவர் மிகவும் கவலைப்படுகிறார். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். இது முடிவுக்கு வருவதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். எனவே அவர் அதைப் பற்றியும் மிகவும் கவலைப்படுகிறார்” எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


குணதிலக்க இன்று சிட்னி டவுனிங் சென்டர் (Sydney’s Downing Centre) உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு பிணை மறுக்கப்படலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


அவுஸ்ரேலியாவில் பெண்ணொருவரை – அவரின் சம்மதமின்றி வன்புணர்வுக்குட்படுத்தியதாக தனுஷ்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் அப் (App) ஒன்றின் மூலம் தனுஷ்க தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள இலங்கைக் கிறிக்கட் அணியினர் தங்கிருக்கும் இடத்தில் வைத்து, கிறிக்கட் வீரர் தனுஷ்க, நேற்று அவுஸ்ரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »