Our Feeds


Sunday, November 20, 2022

RilmiFaleel

பசில் நாடு திரும்புகிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களை கழித்த பின்னர் இன்று (20) நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமை பெற்ற அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்.

பசில் ராஜபக்ஷவின் வருகையை தொடர்ந்து எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பது பசில் ராஜபக்ஷவின் கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »