பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த அவர் பிற்பகல் 5.30 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.