நாட்டில் தங்கத்தின் விலை ஓரளவு அதிகரிப்பை வெளிக்காட்டுவதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்றைய தினம் தங்கத்தின் விலை இவ்வாறு பதிவாகியுள்ளது.
24 கரட் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 179,950 ரூபாவாக காணப்படுவதோடு, 22 கரட் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 165,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 கரட் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 157,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது