இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த குறித்த இருவரும் சிறிது நேரத்திலேயே வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுமியை இரண்டு இளைஞர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும், இதன்போது பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த 15 வயது சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததை அவதானித்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, இரு இளைஞர்களும் உடல் நலம் குன்றிய சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு அந்த பகுதியை விட்டுச் சென்றுள்ளமை தெரியவந்தது.
இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாரிடம் வினவிய போது, வைத்தியசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கெமராவை சோதனை செய்து, உரிய கார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.