Our Feeds


Wednesday, November 16, 2022

ShortNews Admin

ருவாண்டா அனுப்பி வைக்கப்படும் இலங்கை அகதிகள் - காரணம் வெளியானது.



பிரிட்டிஷ் அரசின் கீழுள்ள டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக “The New Humanitarian” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தமது உயிரைப் பணயம் வைத்து படகு மூலம் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் சென்றடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களில் சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த தீவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றும் சிலர் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள “ரீ யூனியன்” தீவுக்கு படகுகளில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜொன்சன் பதவி வகித்த காலத்தில் குறித்த அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் இருந்ததாகவும் , அது நீதிமன்றத்தால் கைவிடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டுக்கு சில அகதிகளை அனுப்பும் பிரித்தானிய அதிகாரிகளின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »