Our Feeds


Wednesday, November 16, 2022

ShortNews Admin

மீண்டும் களமிறங்குகிறார் ட்ரம்ப் - ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி.



2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


புளோரிடா மாநிலத்திலுள்ள தனது மார் ஏ லகோ இல்லத்தில்  உள்"ர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (இலங்கை - இந்திய நேரப்படி இன்று புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் இதனை அறிவித்தார்.

2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் , ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து ஜனாதிபதியாக தெரிவானார்.

எனினும்,  2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் ட்ரம்ப் தோல்வியுற்றார்.


எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி வரும், டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

76 வயதான டொனால்ட் ட்ரம்ப், முதற்கட்டமாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை பெறுவதற்கு போட்டியிட வேண்டும். இதில் வெற்றி பெற்றால் அவர் அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக போட்டியிடுவார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »