Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews Admin

லெப்டாப் சார்ஜர் வெடிப்பு சம்பவத்தில் சிறுவன் உயிரிழப்பு.



பலபிட்டிய – பட்டபொல – கொபேய்துடுவ பிரதேசத்தில் மடிக்கணினி சார்ஜர் வெடித்ததில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.


14 வயதான பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன், மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மடிக்கணினியின் சார்ஜர் வெடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »