Our Feeds


Monday, November 21, 2022

News Editor

யாழ். அல்லைப்பிட்டியில் வயல் நிலங்கள் உவராகும் அபாயம்


 

யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார்  வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவராகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலுமினியம் தொழிற்சாலைக்கு பின்புறமாக உள்ள தனியார் நிலப்பரப்பில் சுமார் 70 குடியிருப்புகளை கொண்ட வீட்டுத் தொகுதி  அமைக்கப்படவுள்ளது.

சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ள குறித்த வீட்டு தொகுதிக்கான வீதியானது உவர் நீர் தடுப்பணைக்கு அருகாமையில் செல்கின்ற நிலையில் தடுப்பணைக்கு அருகாமையில் சுமார் 2 அடி ஆழத்தில் மண் தோண்டப்பட்டு வீதியின் அருகே அமைக்கப்படுகிறது.

பாரிய நிதிச் செலவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு திட்டத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ள தடுப்பணையின் கீழ் பகுதியில் இருந்து பெறப்படும் மண்ணே அணைக்கப்டுகிறது.

இவ்வாறு தடுப்பணயின்   அருகில் மண் அகழ்வு இடம்பெறுவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்  எதிர் காலத்தில் வயல் நிலங்களும் உவர்நீர் ஆகிவிடும்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »