அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டின்போது இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் சீன ஜனாதிபதியை ஸீ ஜின்பிங்கை அவர் சந்திக்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்னர் இவர்கள் சந்தித்துள்ளனர்.
தொடர்பாடல் வழிமுறைகளை பேணுதல் மற்றும் ஆழமாக்குதல் குறித்தும், போட்டித்தன்மையை பொறுப்புணர்வுடன் நிர்வகித்தல் மற்றும் இணைந்து செயற்படுவது குறத்து இவர்கள் கலந்துரையாடுவர் என வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரீன் ஜீன் பிரைஸ் தெரிவித்துள்ளார். (S)