கம்பஹாவில் இருந்து சற்று தொலைவிலுள்ள பிரதேசமொன்றில் பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
40 வயதுடைய குறித்த பெண் நிறைவேற்று தரத்தில் பணிபுரியும் ஊழியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பெண் தரையில் குதித்ததையடுத்து, அவரது கணவர் 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாடியில் இருந்து வீழ்ந்ததில் பெண்ணின் முள்ளந்தண்டு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட இன்னல்களை சமாளிக்க முடியாமலேயே வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததாக சம்பவத்தில் காயமடைந்த பெண் தெரிவித்ததாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.