போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பெண் பொலிஸ் அதிகாரிகளின் கழுத்தை பிடித்து, வலுக்கட்டாயமாக அவர்களை தள்ளியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாணந்துரை (தெற்கு) பிரதான பொலிஸ் பரிசோதகரின் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது என குறித்த இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளை பணிக்காக ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே தான் அவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. (TC)