விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்க நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என தெரிவித்து தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த அகழ்வுப் பணியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.டுள்ளனர்.