பகிடிவதை தொடர்பான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் இனிவரும் காலங்களில் பதிவாகும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன சகல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.